பாலியல் இன்பம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாதது. செக்ஸ் என்பது ஆண், பெண் உறவை நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. படுக்கை அறையில் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது, ஒரு பிணைப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு தாந்திரீக செக்ஸ் முறை உதவும்.

இது உங்களுடைய செக்ஸ் பரவசத்தை தூண்டுகிறது. உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் தாந்த்ரீக செக்ஸ் முறை என்பது உங்கள் உறவை வலுப்படுத்தும் மற்றும் ஒரு மெதுவான, தியான பாலியல் வடிவமாகும். இது உங்கள் எல்லா புலன்களிலும் கவனம் செலுத்துகிறது மற்றும் உங்கள் மெதுவான சுவாசத்தின் அடிப்படையில் பாலியல் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது. தாந்திரீக செக்ஸ் முறை என்பது வெற்றிகரமான மற்றும் நெருக்கமான வாழ்க்கை முறைக்கு எப்படி உதவுகிறது என்பதை இக்கட்டுரையின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

தாந்த்ரீக செக்ஸ் முறை
உங்களுக்கும் உங்களது துணைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த தாந்த்ரீக செக்ஸ் முறை உதவும் மற்றும் மெதுவான மற்றும் தியான வடிவிலான பாலியல் உறவு ஆகும். இந்த பயிற்சி செய்வதன் நோக்கம் பாலியல் இன்பத்தை வாழ்நாளின் பேரின்பமாக மாற்றுவது. ஒரு நபர் தனது பயம், பதட்டம், கவனச்சிதறல்கள், மன அழுத்தத்தை தவிர்த்து, அவர்களின் மனம், ஆன்மா, உணர்ச்சிகள் மற்றும் பாலியல் ஆசை ஆகியவற்றைத் திறக்க உதவும் ஒரு பண்டைய கால நடைமுறை இது. உங்களது எல்லா உணர்ச்சிகளையும் முன்னிறுத்தி, மெதுவான சுவாசித்தலின் மூலம், உங்களது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த தாந்த்ரீக செக்ஸ் முறை பயன்படும்.

நினைவாற்றல் பயிற்சி
தாந்த்ரீக செக்ஸ் என்பது உள் பகுதியுடன் உங்கள் மனதை இணைக்க உதவுகிறது. இது உங்கள் உள் ஆத்மாவுடன் உங்களை மீண்டும் இணைக்க உதவுகிறது. உங்களின் ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து, மெதுவாக சுவாசிக்கும் போது, வழக்கமாக நீங்கள் செய்யும் பாலியல் செயல்களை விட இந்த செக்ஸ் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறக்கூடும்.

மன அழுத்தத்தை நீக்குகிறது
செக்ஸ் உங்களின் மன அழுத்தத்தை வெளியேற்றி ,இன்பத்தை தருகிறது. மேலும், பதற்றம் மற்றும் அச்சத்தை நீக்கி தாந்த்ரீக செக்ஸ் மூலம் உங்களின் மன அழுத்தம் மற்றும் கவலையை நீக்க உதவுகிறது. உங்களின் இந்த செக்ஸ் முறை எல்லா புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுவதால், இது எந்த உணர்ச்சி அல்லது மன அழுத்தத்தையும் நீக்க உதவுகிறது.

உங்களை உங்கள் கூட்டாளருடன் இணைக்கிறது
முதல் விதியாக தாந்த்ரீக உடலுறவில் ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்து ஆழமான, மெதுவான சுவாசத்தை பெற்று உங்கள் கூட்டாளருக்கும் ஒருவருக்கொருவர் ஆற்றல்களை சேமித்து வைக்க உதவுகிறது மற்றும் மிகவும் நெருக்கமான இணைப்பை உருவாக்க உதவுகிறது. நீங்கள் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பினால், உங்கள் கூட்டாளியின் கண்களைப் பார்த்து, உங்கள் இருவரின் ஆற்றல்களுக்கு ஏற்ப செயல்படுங்கள்.

இன்பத்தில் முழுமையன கவனம் செலுத்த உதவுகிறது
உடலுறவு என்பது வெறும் 5 அல்லது 10 நிமிடத்தில் முடித்துவிடுவதில்லை. உடலுறவை மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் திருப்திகரமானதாகவும் அனுபவிக்க அதிக நேரம் எடுத்து கொண்டு நன்றாக செயல்படுங்கள். குறைந்த பட்சம், தாந்த்ரீக செக்ஸில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கூட்டாளியின் உடலை உணர்ச்சி பூர்வமாக ஆராய்வது உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியான அலைகளின் சிற்றலைகளை உருவாக்கும். இது உங்கள் இருவருக்கும் உணர்வுபூர்வமாக திருப்தி அளிக்க உதவும்.

கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது
தாந்த்ரீக செக்ஸ் என்பது அதிக மன அழுத்தம் மற்றும் பதட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் நீங்கள் உடலுறவில் நன்றாக செயல்பட உதவுகிறது மற்றும் கவலைக்குரிய நபருக்கு ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. மேலும் சிறந்த செயல்திறனுக்காக மெதுவான சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது.

பேரின்பத்தை தருகிறது
அன்பைப் புதுப்பிக்க தாந்த்ரீக செக்ஸ் உதவுகிறது. மேலும், இரண்டு உடல்கள் மற்றும் அவற்றில் வாழும் ஆத்மாக்களின் ஒன்றியத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு வழியாகவும் இந்த செக்ஸ் முறை மாறுகிறது. இந்த வழியில், தம்பதிகள் உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக மட்டத்தில் இணைக்க முடியும். இது அவர்களுக்கு பேரின்பத்தை கொடுக்கும்.

இறுதி குறிப்பு
பாலியல் திருப்தி அளிக்காத மற்றும் குறைந்த செக்ஸ் உந்துதல் கொண்ட தம்பதிகளை தாந்த்ரீக உடலுறவு மூலம் முயற்சி செய்து அவர்களின் பாலியல் இன்பத்தை அதிகரிக்கலாம். இது நெருக்கத்தை அவர்களுக்குள் அதிகரிக்க உதவும். தம்பதிகள் இருவரும் தாந்த்ரீக உடலுறவில் தேர்ச்சி பெறும் போது ஒருவருக்கொருவர் அவர்கள் மனதையும் ஆன்மாவையும் நன்றாக அறியலாம்.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






