திருமணம் செய்வதற்கு முன்பு ஒரே வீட்டில் ஒன்றாக  இருக்கீங்களா? அப்ப ‘இத’ நீங்க எப்படி சமாளிக்கணும் தெரியுமா

இளம் தம்பதிகளுக்கு இன்றைய காலகட்டத்தில் லிவ்விங் டுகெதர் உறவு என்பது  சாதாரணமாக ஆகிவிட்டது. பல தம்பதிகள் இன்று ஒருவருக்கொருவர் திருமணம் செய்வதற்கு முன்பு ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க விரும்புகிறார்கள். இந்திய சமூகம் லிவிங் டூ கெதர்   உறவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அதிகமான தம்பதிகள் இந்த உறவுகளில் இருக்கவும் விரும்புகிறார்கள்.

ஒன்றாக உங்கள் லவ்வருடன் வாழ்வது நீண்ட கால கற்பனையாக இருக்கலாம். இது இறுதியாக நனவாகும். ஆனால், நீங்கள் திருமணத்திற்கு முன்பு லிவ்விங் டுகெதர் உறவில் ஒன்றாக இணைந்து இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒருபோதும் இரவில் ஒருவரையொருவர் பிரிந்திருக்க வேண்டாம். படுக்கை அறையில் உங்களுக்கு பிடித்த உணவுகளை எப்போதும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளலாம். ஒன்றாக இணைந்து திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.

உங்களுக்கு இந்த உறவில் மகிழ்ச்சி இருந்தாலும், முதல் முறையாக லிவ்விங் உறவில் இருப்பது என்பது  சில கேள்விகளையும் கவலையையும் உங்களுக்கு ஏற்படுத்தும். உங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவருடன் வீட்டு இடத்தைப் பகிர்வது ஒரு புதிய உணர்வாக இருக்கும். எனவே,முதல் முறையாக நீங்கள்  உங்கள் கூட்டாளருடன் லிவ்விங் டுகெதரில் இருக்கிறீர்கள் என்றால் கவலைகளைச் சமாளிப்பதற்கான சில வழிகளை இந்த தொடரில் காணலாம்.

உணர்வுகளை தெரியப்படுத்துங்கள்

 திருமணம் ஆவதற்கு முன்பு லிவ்விங் டு கெதர் உறவை சமாளிப்பதற்கான சிறந்த மற்றும் முக்கிய வழி உங்கள் உணர்வுகளை உங்கள் துணைக்கு தெரியப்படுத்துவதாகும். ஒன்றாக இருவரும் இணைந்து செல்லும் போது   உங்கள் துணையிடம்  நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை சொல்லாமல் இருக்க வேண்டாம். நீங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை, ஆனால் அந்த உணர்வுகளை உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

சில அடிப்படை விதிகளை அமைக்கவும் 

உங்கள் துணையும் நீங்களும் இணைந்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றி திட்டமிட வேண்டும். நீங்கள் இருவரும் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை நீங்கள் சமமாகப் பிரிப்பது, மளிகைப் பொருட்களைப் வாங்க செல்வது அல்லது சில அடிப்படை வீட்டு வேலைகளை செய்வது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதை உங்கள் கூட்டாளருடன் விவாதிக்க தயங்க வேண்டாம். எந்தவொரு தேவையற்ற தொந்தரவும் இல்லாமல், ஆரோக்கியமாக உறவை  வைத்திருக்க சில அடிப்படை விதிகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான எல்லைகள் 

ஒருவருக்கொருவர் ஒன்றாக வாழும் போது தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்காதது குறித்து சில தேவையான எல்லைகளை அமைக்கவும். ஒன்றாக நீங்கள் இருவரும் வாழ்ந்தாலும், உங்கள் தனித்துவத்தை இழக்காதது முக்கியமானதாகும். நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட நேரத்தை  தாராளமாக செலவிடலாம். இருவருக்கும் அவர்களுடைய தனிமையின் தேவையை புரிந்து கொண்டு, அவர்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும்.

உற்சாகங்களை இழக்காதீர்கள் 

உங்கள் இருவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி என்னும் பட்டாம்பூச்சியை பறக்க விடுங்கள்.உற்சாகத்தை உங்கள் உறவில் ஒருபோதும் இழக்காதீர்கள். ஒன்றாக உங்கள் துணையுடன் வாழ்வது ஒரு கனவான விவகாரமாக இருக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவி செய்து வேலைக்குத் தயாராகி வருவது வழக்கமாக இருப்பதை விட மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் தோன்றும்.  இந்த உறவில் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் துணையுடன் அது குறித்து பேசுவது சிறந்த வழியாகும்.

உங்களுக்கு லிவ்விங் டுகெதர் உறவுகள் தேவையானதாக இருக்கலாம்

இந்தியாவில் லிவ்விங் டுகெதர் உறவு  இன்னும் பிரபலமாக இல்லை என்றாலும்,இந்த உறவில் பெரும்பாலான தம்பதிகள்  ஒன்றாக வாழ்வதற்கான யோசனையைத் தழுவி வருகின்றனர். லிவ்விங் டுகெதர் சாத்தியமானால், அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோக்கைக் இந்த உறவு கொடுக்கக்கூடும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women