பேங் ஆப் பரோடா 2021ம் ஆண்டுக்கான சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. 24-35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-04-2021.பேங் ஆப் பரோடா (Bank of Baroda) நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய பேங் ஆப் பரோடா வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 09 ஏப்ரல் 2021 அன்று இந்த அறிவிப்பை பாங்க் ஆப் பரோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி 2021 ஆம் ஆண்டிற்கான பாங்க் ஆப் பரோடா ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 407 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். பாங்க் ஆப் பரோடாவின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் மூத்த உறவு மேலாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://bankofbaroda.in என்ற பாங்க் ஆப் பரோடாவின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
பாங்க் ஆப் பரோடா நிறுவனத்தில் 01 பதவிகளுக்கான 407 காலியிடங்கள்
01.பாங்க் ஆப் பரோடா நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் (Senior Relationship Manager) பணிக்கான காலியிடங்கள்
பாங்க் ஆப் பரோடா நிறுவனமானது சமீபத்தில் மூத்த உறவு மேலாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 29.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பேங் ஆப் பரோடா
பணி சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர்
கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள் 407
வயது வரம்பு 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.04.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 29.04.2021
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர் மற்றும் ஓ.பி.சி வேட்பாளர்கள்: ரூ 600
எஸ்.சி, எஸ்.டி, பிடபுள்யூ, பெண்களுக்கு- ரூ 100
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






