நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற போது விபத்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மணமகன் வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஒரு நிச்சயதார்த்த விழா நடப்பதாக இருந்தது. இந்த விழாவிற்காக மேல்மருவத்தூர், ராமாபுரம் பகுதியை சேர்ந்த மணமகன் மணிவண்ணன் குடும்பத்தினர், மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 40 பேர் தனியார் பேருந்து மூலம் கல்பாக்கம் சென்று கொண்டிருந்தனர்.

மாலை 5 மணியளவில் கூவத்தூர் வேப்பஞ்சேரி அருகே வந்தபோது இவர்களது பஸ்சும், புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் தனியார் பஸ்சில் இருந்த மணமகன் மணிவண்ணனின் தாய் அலமேலு ( 52 ), மேல்மருவத்தூர் அன்னபூரணி ( 55 ), திண்டிவனம் வேட்டவராயன் ( 60 ) மற்றும் முனியம்மாள் ( 50 ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களில், அரசு பஸ் டிரைவர் கடலூரைச் சேர்ந்த அய்யப்பன் ( 45 ) அவர்கள் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தனியார் பஸ் டிரைவர் சீனிவாசன் ( 40 ) மற்றும் அரசு பஸ் கண்டக்டர் தமிழரசன் ( 53 ) உள்ளிட்ட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மணமகன் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் வேறு வாகனம் மூலம் வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து கூவத்தூர், கல்பாக்கம் போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






