சட்டமன்ற தேர்தல் – அனைத்து கட்சியையும் ஓரம்கட்டிய எடப்பாடி பழனிசாமி

 

சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலினை விட  போட்டியிட்ட தொகுதியில் அதிக அளவு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

 

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தினத்தன்று பொது மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கொரோனா காலம் என்பதால் தேர்தலை பாதுகாப்பாக நடத்திய தேர்தல் ஆணையம், மாலை 6 மணி முதல் 7 வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்குப்பதிவையும் நடத்தியது.

 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு ஆதரவாக இருந்த போதும், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே இது முக்கியமான தேர்தல் என்பதால் இந்த இரண்டு கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வந்தன. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை 5 முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

 

அதிமுக முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமமுக முதல்வர் வேட்பாளாராக டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், மநீம முதல்வர் வேட்பாளாராக கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளாராக சீமான் திவொற்றியூர் தொகுதியிலும் களம் கண்டனர்.

 

வாக்குப்பதிவு முடிந்ததும் அதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 234 தொகுதிகளில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும். அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீதம், சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீதம், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கில் 60.72 சதவீதம் வாக்குவாக்குகளும் பதிவாகியுள்ளன. அதனையடுத்து முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளை பொறுத்தவரை பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவும், ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course