மின்னல் வேகத்தில் வளர்ச்சியடைந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு..???

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டில் மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

 

உலகில் வேறு எந்தப் பெரும் தொழிலதிபர்கள் போல் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி கௌதம் அதானி இந்த வருடம் உலகப் பணக்காரர்களை விட அதிகமாக சம்பாதித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 2021ல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஓரே வருடத்தில் 16.2 பில்லியன் டாலர் அதிகரித்து 50 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் கௌதம் அதானி இந்த வருடம் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

 

scroll to top