காதலுக்காக தந்தையை கொன்ற மகள்…!

உத்தரபிரதேச மாநிலம் நோய்டாவை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தன் மகளின் அறையில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து, தனது மகளின் அறையின் கதவை திறந்து பார்த்திருக்கிறார்.

In Uttar Pradesh, Daughter Kills Father

கதவை திறந்த தகப்பனுக்கு ஒரே அதிர்ச்சி! அங்கு தன் மகள் தன் காதலனுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், மகளின் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் பெரிதாகவே, கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சண்டையில், எதிர்பாராத விதமாக தன் தந்தையையே மகள் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டிருக்கிறார். சத்தம் கேட்டு, விஷ்ணுவின் மனைவி ஷாந்தி ஓடிவந்து பார்த்துள்ளார். அதற்குள் விஷ்ணு இறந்துவிட்டார்.

காதலனை காப்பாற்றுவதற்காக தன் அப்பாவையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, ஷாந்தி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தன் மகளை கைது செய்துள்ளனர். ஆனால், காதலன் தப்பி ஓடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course