திருமணமான பெண்களுக்கு தாம்பத்திய உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள்

திருமணமான பெண்களின் தாம்பத்திய உடலுறவில் ஏற்பட்டிருக்கும் கால மாற்றங்கள் ரசிக்கும்படியாக இருப்பதாக புதிய சர்வே வெளியிட்டு இருக்கிறது. திருமணமான பெண்களின் தாம்பத்திய உடலுறவு ஆசையில் மாற்றங்கள் ஏற்படுவது ரசிக்கும்படியாக இருப்பதாக புதிய சர்வே வெளியிட்டு இருக்கிறது.  அதில் சில சிந்திக்கக்கூடிய தகவல்களும் இருப்பதாக தனியார் பாலியல் நல அமைப்பு எடுத்திருக்கும் சர்வேயில் இருக்கும் முக்கிய விஷயங்கள்:


தனது மனைவிக்கு தாம்பத்திய சுகத்தை அளிப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். சராசரியாக வாரத்தில் மூன்று முறை பெரும்பாலான ஏழை தம்பதியினர் பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால் 30-35 வயதுகளில் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சர்வே. அதே சமயத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயது கொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் மற்ற பொழுதுபோக்குகளிலும் ஆர்வத்தை கொண்டுள்ளதால்  அவர்கள் தாம்பத்திய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.


மாதத்தில் 58 சதவீத பெண்கள் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் உடலுறவு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாட்கள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் மாதத்தில் 72 சதவீதம் பெண்கள்  5 முதல் 8 நாட்கள் வரை உடலுறவு கொள்வதாக கூறியிருக்கிறார்கள். பெரும் பகுதியில் உள்ள 28 சதவீத பெண்கள்  மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.

தாம்பத்திய உடலுறவில் உள்ள திருப்தியின்மையை பற்றி கணவரிடம் பெண்கள் பேச விரும்புவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்று கணவரிடம் எடுத்துச் சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே வெளியிட்டு இருக்கிறது. அது பற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்க வேண்டியதில்லை ‘ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்று பட்டவர்த்தனமாக கருத்து கூறுகிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம் பேர் ‘தாம்பத்திய உடலுறவு நடந்து முடிந்த பின்பு  ஏதாவது குறைகள் இருந்தால் அது பற்றி கணவரிடம் மனம் விட்டு பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல்

 தம்பதிகளின் பாலியல் உறவு திருப்திக்கு முன் விளையாட்டுகள் மிக முக்கியம் என பெரும்பாலான தம்பதிகள் உணர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே வெளியிடுகிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாக கூறுகிறார்கள். இதையடுத்து 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லியில் இருக்கும் பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பையில் இருக்கும்  பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

பெண்களுக்கு டயாப்ரம் (Diaphragm) எனும் கருத்தடை சாதனம் உள்ளது. பெண்கள் அதிகமாக விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள் தனது கணவரை ஆணுறை பயன்படுத்த கூறுவோம் என்று கூறுகிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதால் 68 சதவீதம் பேர் வரை அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம் என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் கருத்தடை  பாதுகாப்பான முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே வெளியிட்டு இருக்கிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top