மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக நடந்து வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு தான் இப்போது நேரடி போட்டி வருகிறது.

தேர்தல் அறிவித்ததில் இருந்து பாஜகவுக்கும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் போக்கு இருந்தது. 4-ம் கட்ட வாக்குப்பதிவுகளில் வன்முறை வெடித்து துப்பாக்கிச்சூடு நடந்தது. பாஜக வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்களை இறக்கியுள்ளது என மம்தா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். பிரச்சார மேடைகளில் பாஜவையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தொடர்ந்து கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது.

மே 2-ம் தேதி வீட்டுக்கு சென்று விடுவார் என பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மம்தா, ‘பிரதமர் மோடி அண்மையில் வங்கதேசம் சென்று வந்தார். இப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது. நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எல்லை மீறி பேசுகிறார். பாஜக வீழ்ந்தால் தேசம் தப்பி பிழைக்கும். ” என்றார்.இந்நிலையில் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணிநேரம் தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலின் போது விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து மம்தா விளக்கம் அளிக்க கூறிய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு மம்தா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






