இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணமாக மத்திய அரசு முக்கிய கட்டுப்பாட்டினை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மள மளவென அதிகரித்து கொண்டே வருவதால் இனி வரும் காலங்களில் வீட்டுக்குள் இருக்கும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் என கருத்தில் கொண்டு வீட்டிற்குள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பாதிக்க கூடும் என எச்சரித்துள்ளது.
It’s time people start wearing masks inside their homes as well: Govt on second wave of COVID-19
— Press Trust of India (@PTI_News) April 26, 2021






