ராம்பூரில் மருத்துவரை கன்னத்தில் அறைந்த பெண் செவிலியரால் பதற்றம்!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் பெண் செவிலியர்க்கும் இடையே அடிதடியால் பதற்றத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா பாதிப்பால் அங்கு உள்ள  மருத்துவமனைகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்புகள் முறையாக இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வைக்கின்றனர்.

இந்த நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையை சேர்ந்த பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டதால்  மருத்துவர் தகாத வார்த்தையால் பெண் செவிலியரை பேசியதால் ஆத்திரமடைந்த அவர் மருத்துவர் கன்னத்தில் அறைந்தார். இதனால் கோபமடைந்த மருத்துவர் பெண் செவிலியரை திருப்பி தாக்கியது மருத்துவமனைக்குள் கலவரமானது.

மருத்துவர் மற்றும் பெண் செவிலியரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தையில் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என இருவரும் கூறியுள்ளனர்.

 

கொரோனா பாதிக்கப்பட்டு நோயாளிகள் தவித்து வரும் நிலையில் மருத்துவரும் செவிலியரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு அடிதடியில் ஈடுபட்டது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course