கொரோனா இரண்டாம் அலை ஜூன் மாதம் குறையும் என்றும் மூன்றாவது அலை அடுத்த 6 மாதங்களுக்கு பின் தாக்கும் என்றும் ஒன்றிய நிபுணர்கள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. நான்கு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. ஆனால் பலியின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி விட்டது.
ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தினசரி பாதிப்பு மிக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அறிவியல் அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் அமைக்கப்பட்ட மூன்று பேர் நிபுணர்குழு கணித முறைப்படியான கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில் மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்ரகாண்ட், குஜராத், அரியானா, டெல்லி, கோவா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையின் உச்சத்தை சந்தித்து விட்டனர்.
ஆனால் தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் வரை மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் தடுப்பூசியின் வேகத்தையும் அதிகரித்தால் மட்டுமே மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் மத்திய நிபுணர் குழு எச்சரித்துள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






