கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தி வருகிறது. இதற்க்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 16.32 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,32,65,572 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 14,25,76,903 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 83 ஆயிரத்து 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றுக்கு 1,83,20,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு – 3,36,95,916, உயிரிழப்பு – 5,99,863, குணமடைந்தோர் – 2,70,98,620
இந்தியா – பாதிப்பு – 2,46,83,065, உயிரிழப்பு – 2,70,319, குணமடைந்தோர் – 2,07,89,038
பிரேசில் – பாதிப்பு – 1,55,90,613, உயிரிழப்பு – 4,34,852, குணமடைந்தோர் – 1,40,62,396
பிரான்ஸ் – பாதிப்பு – 58,63,839, உயிரிழப்பு – 1,07,535, குணமடைந்தோர் – 50,80,344
துருக்கி – பாதிப்பு – 51,06,862, உயிரிழப்பு – 44,537, குணமடைந்தோர் – 49,32,838

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
ரஷ்யா – 49,31,691
இங்கிலாந்து – 44,48,851
இத்தாலி – 41,53,374
ஸ்பெயின் – 36,04,799
ஜெர்மனி – 35,95,872
அர்ஜெண்டினா- 32,90,935
கொலம்பியா – 31,03,333
போலந்து – 28,51,911
ஈரான் – 27,39,875
மெக்சிக்கோ – 23,80,690
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News