நேற்று நாடு முழுவதும் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாலை முதல் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனால் எல்லா சிவாலயங்களில் இரவு முழுக்க நான்கு கால பூஜை மற்றும் பல்வேறு பூஜைகள் இன்று காலை வரை நடைபெறும்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோர் பங்கு பெறுவர்.
இந்த ஆண்டும் அதே போல் ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். கொரோனா நோய் தொற்று காரணமாக குறிப்பிட்ட அளவு பக்தர்களை மட்டுமே அனுமதித்தனர். அனுமதி பெற முடியாதவர்கள் நேரலையில் தங்கள் வீட்டிலேயே டிவியில் அந்தந்த மொழிகளில் உள்ள முக்கிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்த்தனர்.
அங்கு இரவு முழுவதும் பக்தர்கள் சிவராத்திரியை கொண்டாட பிரபல இசை மற்றும் நாடக கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சத்குருவின் சொற்பொழிவு, லிங்க பைரவி மஹா ஆர்த்தி, ஆதியோகி திவ்ய தரிசனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
