கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்த தெலுங்கானாவில் இன்று காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு உத்தரவுப்படி தெலுங்கானாவில் முழு ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இன்று தொடங்கும் முழு ஊரடங்கு 10 நாட்களுக்கு அதாவது 22 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு தொடங்கியுள்ளதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதி மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. முழு ஊரடங்கு தொடக்கத்தின் காரணமாக நேற்றுமையே தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் மது கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து குடிமக்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இதனிடையே புதிதாக 4,801 தொற்று பரவியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ள கொரோனாவால் பதிப்படைந்தோரின் எண்ணிக்கை 60,136 பேர். கொரோனாவால் நேற்று மட்டும் 32 உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 2,803 ஆக தெலுங்கானாவில் அதிகரித்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






