அதிக காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்ட உலர்ந்த பெரிய நெல்லிக்காய் போன்ற தோற்றம் கொண்ட ஜாதிக்காய் எல்லாவிதத்திலும் மருத்துவம் செய்ய பயன்படுகிறது.
* ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய்.

* கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி.
*தாது நட்டம்” எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பயன்படுத்துகிறது.
* ஜாதிக்காய் நரம்பு மண்டலத்தை தூண்டுவதால் மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தும், நினைவாற்றலைப் பெருக்கவும், ஜாதிக்காய் பயன்படுகிறது.
* ஜாதிக்காய், சுக்கு தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தை சேர்த்து பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். அதனுடன் கருப்பட்டி நெய் சேர்த்து லேகியம் தயாரித்து உண்ணலாம்.

* இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் வேதிப்பொருள் தான் காரணம்.
* தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மிர்ட்டிசின் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள்.
* ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வலிமையும், சீரான தூக்கத்தையும் தரும்.
* குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.
* வயிற்று வலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்கு சிறந்த வலி நிவாரணி.






