அடிமைகள் என்றதும் நம் மனதில் வருவது மதுபிரியர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தான்… ஆனால், அதற்கு முன் அடிமைகள் என்றால் என்ன? ஏன் அவர்களை அடிமைகள் என அழைக்கிறோம் என்று பார்க்கலாம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, அதுபோல ஒரு விஷயத்தின் மீது ஏதோ ஒரு காரணத்தால் அல்லது ஆர்வத்தினால் அதை திரும்ப திரும்ப செய்வது, அதை செய்தால் மனதில் ஏற்படும் திருப்தியான உணர்வு இதை தான் நாம் அடிமைத்தனம் என்று சொல்கிறோம். இதை பிரியத்தையும் தாண்டி அதிகமாக செய்பவர்களை அடிமைகள் என்று சொல்கிறோம்.
இது முழுக்க, முழுக்க நம் மனநலத்தை சார்ந்தது. எப்படி? சுய இன்பம் செய்யும் போது, நம் மூளையில், டோபமைன் என்ற திரவம் சுரந்து, நம்மை பரவச நிலைக்கு எடுத்துச் செல்லும். அந்த உணர்வை மூளை ஒரு முறை அனுபவித்து விட்டால், திரும்ப திரும்ப நம்மை அதை செய்ய வைக்கும், அதுபோல தான், எல்லா வித அடிமைத்தனத்திற்கு மூளைக்கு பெரிய பங்கு உண்டு. முதலில் addiction என்பது மூளை சார்ந்த விஷயம். மூளையை நாம் கட்டுக்குள் கொண்டு வந்தாலே நாம் அதிலிருந்து வெளிவரலாம்.

இது எல்லோருக்கும் தீமை பயக்குமா ?
கண்ணதாசன் நாம் அனைவரும் அறிந்த ஒரு எழுத்தாளர், புகழ் பெற்ற பாடல் ஆசிரியர் இப்படி அவரை பற்றி நிறைய சொல்லிட்டே போகலாம், ஆனால், அவர் ஒரு மது அடிமை, மது அருந்திய நிலையில் மட்டுமே பேனாவை எடுத்து எழுதுவாராம். அப்போது தான் அவரின் கவி திறன் ஓங்கிய நிலையில் இருக்கும் என அவரின் புத்தகங்களில் எழுதியுள்ளார். இது அவரின் உடல் நிலைக்கு தீமையாக இருந்தாலும், பல வெற்றிகளை அவருக்கு அள்ளி கொடுத்தது.இது போல பலருக்கு பல விஷயங்களில் அடிமைத்தனம் நன்மையையும் செய்திருக்கிறது.

நல்லதா?கெட்டதா?
அடிமைத்தனம் நல்லது என ஒரு புறம் இருந்தாலும், இதனால் பல பேர் வாழ்க்கையை இழந்து உள்ளனர் குறிப்பாக, மது,சிகரெட், போதை பொருளுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் மட்டும் அல்லது அவர்களின் குடும்பமும் சீரழிந்து உள்ளது.
நமக்கு பிடித்த பழக்கமே நம்மை தீயில் போடும் அபாயம் வந்தால், அதை கையில் வைத்திருந்து என்ன பயன்.?

தீர்வு இல்லாத பிரச்சனைகளே இல்லை…..அது போல இதற்கும் தீர்வு உண்டு. எப்படி அடிமைப் பழக்கத்திலிருந்து வெளிவருவது….
- முதலில் நான் இந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வர வேண்டும், என்ற எண்ணம் தான் ஒரு மனிதனை விடுவிக்க செய்யும். மூளையை முதலில் பழக்க வேண்டும்.
- எதன் மூலம் நாம் இந்த அப்பழக்கத்தை செய்ய ஆரம்பித்தோம் என்பதை உணர்ந்து அதை ஒரு பேப்பரில் எழுதி, தினமும் அதை செய்யாமலும், பார்க்காமலும் இருக்க வேண்டும்.
- நம்மை தூண்டிவிடும் செயல்களில் இருந்து நம்மை விலக்கி, குடும்பத்தோடு, நண்பர்களுடன், நேரத்தை செலவழிப்பது நம்ம அடிமைப் பண்பில் இருந்து விடுவிக்கும்.
- தியானம், மூச்சுப் பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும்.
- இது எல்லாவற்றையும் விட சுயக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.
- தனியாக இருப்பதை தவிர்த்து விட்டு மக்களோடு மக்களை இணக்கமாக இருக்க கற்று கொள்ளுங்கள். இனிமேல் அடிமை என்ற சொல்லை மறந்திடுங்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






