இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த ஆசனங்களை செய்வோம் வாங்க!  

இரவில் தூங்குவதற்கு நீங்கள் சிரமப்பட்டாலோ அல்லது 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில “யோகாசனங்கள்” இருக்கிறது இங்கே தொடர்ந்து பாருங்கள்.  

பலரது ஆரோக்கியத்தை மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பாதிக்கிறது. உறக்கமில்லாமல் பலர் இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால் நல்ல வளமுடைய வாழ்க்கையை பராமரிக்க தூக்கம் மிகவும் அவசியம். இரவில் தூங்குவதற்கு நீங்கள் சிரமப்பட்டாலோ அல்லது 7 மணி நேரத்திற்கும் கம்மியாக தூங்கினாலோ, உங்களுக்கு தீர்வுகாண சில “யோக” ஆசனங்கள் இங்கே இருக்கிறது.

ஒவ்வொரு உடல் அமைப்பையும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கலாம். இதனை 3 முறை மீண்டும் செய்யவும். பின்பு  படிப்படியாக 10-15 நிமிடங்களுக்கு அதிகரிக்கவும்.

சுகாசனம் (ஹேப்பி போஸ்):

  • தரையில் நேராக அமர வேண்டும் 
  • உங்களுடைய இரண்டு கால்களையும் நீட்டி கொள்ளவும் 
  • ஒன்றன்மேல் ஒன்றாக உங்கள் கால்களை  வைக்கவும்
  • முழங்கால்களில் உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்
  • நிமிர்ந்து உட்கார்ந்து முதுகெலும்பை நேராக இருக்கும்படி உட்காரவும் 

 

வஜ்ராசனம்:

உணவிற்கு பின்பு வஜ்ராசனம் மேற்கொள்ளலாம் 

  • மெதுவாக உங்கள் முழங்கால்களை மடக்கி அதன் மீது அமரவும்.
  • உங்கள் குதிகால் மீது உங்கள் இடுப்பை  வைக்கவும்.
  • ஒன்றுக்கொன்று நெருக்கமாக உங்கள் குதிகால் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் உள்ளங்கைகளை முழங்கால் முட்டிகள் மீது வைக்கவும்.
  • உங்களுடைய முதுகை நேராக்கி அமரவும்.

தியானம்:

இந்த மாதிரி  நுட்பத்தை பயிற்சி செய்ய இயற்கை சூழலைக் கண்டறியவும்

Happy Yoga Day 2020 : தியானம் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகளைப் பற்றித் தெரியுமா..? | do you know the benefits of meditation yoga– News18 Tamil

  • “சுகாசனம்” போன்ற வசதியான தோரணையில் அமர்ந்து கொள்ள வேண்டும் .
  • ஐந்து விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு ஐந்து விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்.
  • உங்களால் முடிந்தவரை கண்களை மூடிக்கொண்டு ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள்.

பலவிதமான ஆரோக்கியத்தை இந்த தியானம் உள்ளடிக்கியது. இது உங்களுடைய அமைதியான உணர்வைத் தீண்டவும் செய்யும். இதனால் ஒரு நல்ல இரவு ஓய்வை உணரமுடிகிறது. உடலுக்கு தேவையான உணவை நாம் உண்பது போல ,உகந்த நிலையில் உடல் செயல்பட தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கம் குறைவான மன அழுத்த அளவையும், அமைதியான மனதையும், நல்ல ஆரோக்கியத்தையும் எளிதாக்குகிறது  

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top