ஒரு சிலர் எப்போதும் ஒரே மாதிரியான பயிற்சிகளையே செய்து வருவார்கள், அப்படி பயிற்சியை செய்யாமல் எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.

தொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்வதால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து அப்பகுதிகளில் அழுத்தத்தை கொடுப்பதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலி ஏற்படும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான பயிற்சிகளையே மேற்கொள்ளாமல் எல்லாவகையான உடற்பயிற்சிகளையும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசோலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு பலம் சேர்ப்பதில் முக்கியமானவை.

பெண்கள் எல்லோரும் தங்களுக்கு ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே போதுமென நினைப்பது. ஆனால் இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல் முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு சிறந்தவடிவ உடலமைப்பை பெற முடியும். அதற்கு உங்களோட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்து உடற்பயிற்சிகளை செய்தல் அவசியம்.
உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு மற்றவர் செய்யும் பயிற்சிகளை செய்ய நினைக்காதீர்கள். எல்லோரும் பொதுவாக இந்தத் தவறை செய்து விடாதீர்கள். உங்கள் உடம்பு தனித்துவமானவை ஆதலால் உங்களுக்கேற்ற உடற்பயிற்சிகளை ஒரு உடற்பயிற்சியாளரின் உதவியோடு செய்ய ஆரம்பித்தால் நிச்சயமாக வெற்றி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் உங்கள் கவனம் முழுவதும் இருக்கட்டும். கவனச்சிதறல் இருக்கவே கூடாது.

கடுமையான பயிற்சியை நீங்கள் செய்யும் போது அதற்கு இடையில் இடைவெளி கொடுப்பது முக்கியம். உங்கள் வயிற்றில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், எஞ்சிய அமிலம் இருந்தால் கூட, உங்கள் உடல் தீவிரமான உடற்பயிற்சியின் போது அதை நீக்குவதற்கு முயற்சிக்கும். இதனால் வாந்தி, மயக்கம் வரலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்பயிற்சியின் மூலம் உங்கள் தசைகளுக்கு பயிற்சி தரலாம். குறிப்பிட்ட உடல் தசைகளுக்காக செய்யும் பயிற்சி என்பதால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளி விடலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






