நாம் உண்ணும் உணவுகளில் கறிவேப்பிலைக்கு முக்கிய பங்கு உண்டு. நம்முடைய பெரும்பாலான உணவுகளில் கறிவேப்பிலையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நம்மில் சிலரோ கறிவேப்பிலையை உண்ணாமல் ஒதுக்கி வைத்தே வருகிறோம். மேலும் சிலருக்கு கறிவேப்பிலை உணவில் இருந்தால் கோவம் தான் எழுகிறது.

கறிவேப்பிலையின் ஆரோக்கியமான குணங்களை குறித்து நாம் அறிந்தால், அதை எப்போழுதும் ஒதுக்கவே மாட்டோம். அவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய ஒரு உணவு பொருளாக கறிவேப்பிலை உள்ளது.
கறிவேப்பிலையை மென்று சாப்பிடவும்…

நாம் கறிவேப்பிலையை தமது வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாக மாற்றுவது என்பது குறித்து விளக்குகிறார்கள் மருத்துவர்கள். கறிவேப்பிலை இலைகளை ஒரு கப் தண்ணீரில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வேகவைத்து கசக்கி, இளஞ்சூடாக இருக்கும்போது குடிக்கலாம் அல்லது நீங்கள் அவற்றை மென்று சாப்பிடலாம், பின்னர் சிறிது தண்ணீர் குடிக்கலாம் . முடி ஆரோக்கியத்தைத் தவிர இது பல குறைபாடுகளுக்கும் மிகவும் உதவுகிறது. மேலும் கீழ்காணும் பிரச்சனைகளுக்கும் கறிவேப்பிலை தீர்வாகிறது.
குமட்டல்

குமட்டல் அதிகமாக இருப்பவர்கள் தினமும் இதை செய்துவர குமட்டல் நிற்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர், ஆறு புதிய கறிவேப்பிலைகளை கழுவி உலர்த்தி பின்னர் அரை டீஸ்பூன் நெய்யுடன் வறுத்தெடுக்கவும், ஆறிய பின் அவற்றை மென்று சாப்பிட குமட்டல் நிற்கும்.
வாய் துர்நாற்றம்

நம்மில் பலருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது ஆயுர்வேத நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில் ஐந்து கறிவேப்பிலைகளை ஐந்து நிமிடங்கள் மென்று பின்னர் தண்ணீர் கொண்டு வாயை கழுவ வாய் துர்நாற்றம் நீங்கும் இதை தினமும் செய்துவர வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
வயிற்றுப்போக்கு

கோடைகாலங்களில் நம்மில் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வயிற்றுப்போக்கு இதை வீட்டிலிருந்தே சரிசெய்ய தினமும் 30 கறிவேப்பிலை இலைகளை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட வயிற்றுபோக்கு சரியாகும்.
நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை உணவில் துவையலாக அரைத்து சப்பாத்தி மற்றும் சோறு போன்ற உணவுகளோடு சேர்த்து சற்று அதிகமாக சாப்பிடலாம்.
வாய்ப்புண்கள்

வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கறிவேப்பிலையை தூள் செய்து அதனுடன் தேன் கலந்து வாய் புண் மீது தடவ வாய்ப்புண் சரியாகும். கறிவேப்பிலையானது 2-3 நாட்களில் ஸ்டோமாடிடிஸ் நீக்குகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






