மயிலாடுதுறையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்த பெண் ஒருவர் மூச்சு விடமுடியாமல் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வலுஊரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கொரோனா பரிசோதனை செய்ய அரசு பெரியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பரிசோதனைக்காக காத்திருந்த அவர் திடீரென மூச்சு விட அவதிப்பட்டுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் கொடுத்தும், மயங்கி விழுந்தவரை எழுப்பவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தனது சுயநினைவை இழந்த ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர். அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் ஒருவர் மூச்சு விட முடியாமல் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






