168 கோடி ரூபாய் சிறு குறு நிறுவனங்களுக்கு மானியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கொரோனா பெரும் தொற்றை தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சிறு, குறு நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 168 கோடி ருபாய்  தர தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில் துறையினருக்கான சலுகைகள் குறித்து அவர்களிடையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்தாய்வு நடத்தினர்.

 இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் 60 விழுக்காடு தொகையான 168 கோடி ரூபாய் ஆனது உடனடியாக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனவும் இதனால் தகுதியான நிறுவனங்களுக்கு மானியம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆட்டோ, ரிக்ஸா மற்றும் டாக்ஸி ஆகியவற்றுக்கான சாலை வரி கட்டணங்களை 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்டுவதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும், பெரிய, சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை செலுத்த மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course