அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் படம் அகற்றம் – அ.தி.மு.க கண்டனம்

கும்பகோணம் அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  உருவப்படம் அகற்றப்பட்டதற்கு அ.தி.மு.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கோரி தனது சொந்த நிதி ஒதுக்கி அதனை தொடங்கி வைத்தார். 

அப்போது அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவப்படம் அகற்றப்பட்டு மு.க ஸ்டாலின் படம் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க நகர செயலாளர்  ராமநாதன் மீண்டும் ஜெயலலிதாவின் உருவப்படம் மாட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் கூறுகையில், அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்ற நான் உத்தரவிடவில்லை எனவும், ஜெயலலிதாவின் படம் அகற்றி இருந்தால் அதனை உடனடியாக மாட்டவும் உத்தரவிடுகிறேன் எனவும் சாக்கோட்டை அன்பழகன் கூறினார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top