நாகப்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வேளாங்கண்ணி கடற்கரையில் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன்.

இவர் சக மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது, ராக்கெட் லாஞ்சர் ஒன்று வலையில் சிக்கியுள்ளது. அதை கவனித்த மீனவர்கள் ராக்கெட் லாஞ்சரை வேளாங்கண்ணி கடலோர காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் ஏழு பேர் அந்த ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் வேளாங்கண்ணி கடற்கரைக்கு கொண்டு சென்ற அவர்கள் ஆழமான குழி தோண்டி பாதுகாப்பான முறையில் ராக்கெட் லாஞ்சரை வெடிக்க செய்தனர்.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






