இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலையில் வீசிய சம்பவம் – ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் திரு ஊர் கிராமத்தை சேர்ந்தவர் சுபானி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போது அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. 

இதையறிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இறந்தவரின் உடலை சாலையின் ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாகவும், உடலை சாலையின் ஓரம் வைத்துவிட்டு வந்ததாகவும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களை அழைத்து உடலை எடுத்து அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top