பழனியில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த குடும்பம்…

பழனியில் கருவுற்றிருந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த குடும்பத்தார். பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். ஆயக்குடி பகுதியை சேர்ந்த மங்கையர்கரசி என்பவர் தனது உறவினரான ஹபிஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் அக்கா, தம்பி உறவு முறை என்று கூறி இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மங்கையர்கரசிக்கு அவரது பெற்றோர்களே பிரசவம் பார்த்த நிலையில், பிறந்த ஆண் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளனர்.

மேலும் மங்கையர்கரசியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் பெண்ணின் தாய், தந்தை மற்றும் கணவர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.  

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course