பிட்காயினில் மக்கள் முதலீடு செய்வதை அனுமதிக்க வேண்டும்..

 

பிட்காயினில்  மக்கள் முதலீடு செய்வதை அனுமதிக்க வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாம் ஆன்லைன் நாணயங்களை முதலீட்டுக்கான ஒரு வழியாக கருதி, அதில் மக்களை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு, 100 கோடி பரிவர்த்தனைகளை இலக்காக கொண்டு செயல்படும், யு.பி.ஐ  பேமென்ட் போல, ஆன்லைன் நாணயங்கள் வேகமாக செயல்படாது. ஆனால், இவற்றிடம் மகத்தான மூலதனம் இருக்கிறது.  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பிட்காயினை பயன்படுத்தி, எப்படி தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என, பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் ஆன்லைன் நாணயங்களில் முதலீடு செய்துள்ளனர். இவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை, 10-15 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கருதப்படுகிறது.

scroll to top