கடல் நடுவே மிதக்கும் பிரமாண்ட ஹோட்டல்..

 

கத்தார் நாட்டில் ஒரு புதிய சொகுசு ஹோட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. இது கடலின் நடுவில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துருக்கிய கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனமான ஹெய்ரி அட்டக் கட்டடக்கலை சமீபத்தில் ஹோட்டலின் அம்சங்களை பற்றிய விவரங்களுடன் இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளது.

 சுற்றுச் சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும் மிதக்கும் சொகுசு ஹோட்டல் 2025 க்குள் நிறைவடையும். 152 அறைகள் கொண்டது. அவை ஆற்றல் இழப்பை குறைப்பதற்கும் கழிவு உற்பத்தியைக் குறைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹோட்டலின் முக்கிய அம்சங்களில் ஒன்று தண்ணீருக்கு ஏற்ப சுழலும் திறன் என்பதால், இது மின்சார சக்தியை உருவாக்கி விருந்தினர்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course