
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கனடாவைச் சேர்ந்த யூடியூபர் லில்லி சிங் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முகக்கவசம் ஒன்றை அணிந்திருந்தார்.

அந்த முகக்கவசத்தில் ‘நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.







