கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் திருப்பதி ஸ்வாமி தரிசனத்திற்கு மார்ச் 18 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு தொற்றின் அளவு குறைய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்து ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர், ரூ.300 டிக்கெட்டுடன் இலவச தரிசனத்திற்கு 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலையால் தொற்று மிக வேகமாக பரவுவதால் தற்போது பக்தர்கள் அதிக அளவில் கூடாமல் இருக்க இலவச தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதையடுத்து, தரிசனத்திற்கு ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் பக்தர்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






