ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூட்டத்தை தமிழக அரசு ஏற்க அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை இயக்கும் நிபுணர்கள் தங்களிடம் மட்டுமே இருப்பதாகவும் அதை மாநில அரசு நிர்வகிக்க அனுமதி வழங்கினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரித்து ஒப்படைக்கும் ஆக்சிஜனை எங்களுக்குத் தர வேண்டும் என்றும் அதனை நாங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாட்டை பொருத்து பிரித்து கொடுப்போம் என்றும் மத்திய அரசு வாதாடியது. அப்போது ஆக்சிஜன் உற்பத்தியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி தமிழக அரசு மறுபுறம் வாதிட்டது.

இடையில் குறுக்கிட்ட நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிசனை பிற மாநிலங்களுக்கு விநியோகிப்பதை தமிழக அரசு தடுக்க கூடாது என்று தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை தர முடியாது என்றும் உறுதியாக கூறினர். விசாரணையின் முடிவில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிகமாக அனுமதியளித்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் குழுவில் இடம்பெறுவோர் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யலாம் என்றும், தமிழக அரசிடம் ஆலோசித்து உள்ளூர் மக்களில் இரண்டு பேரை குழுவில் இடம் பெற செய்யலாம் என்று அறிவுறுத்தினர். இது ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும்தான். வேதாந்தா குழுமத்தின் வேறு எந்த ஆதாயத்துக்காகவும் அல்ல என்பதை விளக்கிய நீதிபதிகள் ஸ்டெர்லைட் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






