இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மீள இந்தியா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் நான்கு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு மூன்றாவது நாளாக இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்து 40,938 அதிகரித்துள்ளது. அதேபோன்று தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 54,197 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 55,338 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1கோடியே 93 லட்சத்து 82,642 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு தற்போது 37 லட்சம் பேர் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






