மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

நள்ளிரவில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மும்பை சன்ரைஸ் மருத்துவமனை தீ விபத்தில்  மாட்டிக்கொண்டு   10 பேர் உயிரிழந்தனர். மும்பையில் பாந்தப் பகுதியில் உள்ள சன்ரைஸ்  மருத்துவமனையில் நள்ளிரவில் தீடிரென தீப்பற்றியது.

 

 

விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் காட்டுத்தீ போல் மளமளவென மருத்துவமனை முழுவதும் தீ பரவியது. மருத்துவமனைக்குள்  சிகிச்சை பெற்றுவந்த 70க்கும் மேற்பட்டவர்கள் தீ விபத்தில் சிக்கி தவித்தனர். 

 

 

பிறகு அங்கு சென்ற தீயணைப்பு  வீரர்கள் கிரேன்  உதவியுடன் 20க்கும் மேற்பட்ட  நோயாளிகளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே 2 நோயாளிகள் உயிரிழந்த நிலையில்  தற்போது 9 நோயாளிகள் உயிரிழந்து விட்டதாக மும்பை மாநகராட்சி இடம் இருந்து தகவல் வந்துள்ளது மேலும் இழப்புகள் அதிகரிக்கும் என தகவல் கசிந்துள்ளது.

 

scroll to top