இந்தியாவில் விமானத்துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழப்பு

இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் சுமார் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Airport Jobs in India

IATA என்றைழைக்கப்படும் சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காரோண காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிய அளவில் விமான சேவைகளில் சுமார் 2 லட்சத்து 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

உலக அளவில் 6 லட்சத்து 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவில் விமான சேவையை சார்த்துள்ளவர்களில் மட்டும் சுமார் 30 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

scroll to top