சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 7000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் மிதாலி ராஜ்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக லக்னோவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 45 ரன் எடுத்தார். இவர், தனது 26வது ரன்னை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற என்ற பெயரை தட்டி சென்றார். இவர் இதுவரை 213 போட்டியில், 7 சதம், 54 அரைசதம் உட்பட 7019 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்திருந்தார். சமீபத்தில் இவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது சர்வதேச வீராங்கனை, முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றிருந்தார்.
