கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய துறைகளின் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு மிகவும் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேலாக பதிவாகி வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் மருத்துவமனை படுக்கைகள் மருந்துகள் பற்றாக்குறை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய துறைகளின் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






