விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிதியுதவி ஆனது 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 8 வது தவணையை இந்த மாதம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் நன்மைகளை பயன்படுத்திக்கொள்ள ஆதார் எண் (Aadhaar Number) கட்டாயம் இருக்க வேண்டும். டிசம்பர் 1, 2019 முதல் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விவசாயியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Pmkisan.Gov.In க்கு சென்று வலதுபுறத்தில் உள்ள Farmers Corner செல்லுங்கள். அங்கு உள்ள “New Farmer Registration” விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்து நீங்கள் உங்கள் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உங்கள் பிராந்தியத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அப்பொழுது ஒரு படிவம் உங்களுக்கு முன்னால் தோன்றும். அதில் கேட்டக்கப்பட்டு உள்ள தகவலை உள்ளிட வேண்டும். மேலும், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் உங்கள் உள்ள விவசாய நிலம் தொடர்பான தகவல்களை நிரப்ப வேண்டும்.
கட்டணமில்லா எண்ணை தொடர்புக்கொண்டு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு (Farmers) உதவ மத்திய வேளாண் அமைச்சகத்தால் ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் PM Kisan ஹெல்ப்லைன் 155261 அல்லது கட்டணமில்லா 1800115526 எண்ணை அழைக்கலாம். அதேபோல 011-23381092 என்ற எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
