கோலி 50 ரன்கள் அடித்து இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.

நேற்று கோலி தனது 61ஆவது அரை சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 104 முறை 50 ரன்களை கடந்தவர் என்றவர் சாதனையை வசப்படுத்தி உள்ளார். ஏனென்றால் அவர் 43 சதம் அடித்துள்ளார்.
விராட் கோலி இன்றைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி 195 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 219 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

சொந்த மண்ணில் 10,000 ரன்களை கடந்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 14192 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் 20 சதங்களுடன் சச்சின் இருக்கிறார். கோலி இதுவரை 19 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினை சமன் செய்து விடுவார்.
