இந்தியாவில் இரண்டாம் கட்ட அச்சம்.. மீண்டும் கொரோனா..???

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், இந்தாண்டின் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் புதிதாக 25,320 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 2,97,544 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று புதிதாக 15,602 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 20 நாட்களில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் பிப்ரவரி 17 ம் தேதி வரை இறங்குமுகத்தில் இருந்த சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, தற்போது  அதிகரித்துள்ளது.

நேற்று வரை 2 கோடியே 97லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய நல்வாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது

 

 

 

 

scroll to top