டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமான நிலை நிலவி வருவதால் தற்போது டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் பலி. மேலும் போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ள நிலையில், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்றி கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிர் இழக்கும் அபாயத்தில் உள்ளதாக உடனடியாக தங்கள் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வென்டிலேட்டர் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை எனவும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






