இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 லட்சத்து 12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து 12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77,410 ஆக உயர்வடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30,168 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 29,153 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மொத்தமாக குணமடைந்து ஒரு கேளிக்கை ஒரு கோடியே 72 லட்சத்து 80 ,844 ஆக உயர்ந்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






