டிக்கு வெட்ஸ் ஷெரு படத்தை தயாரிக்கும் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத். இவருடன் இணைந்து அரவிந்த் சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில், ஜெயலலிதாவின் சுயசரிதை “தலைவி” என்ற பெயரில் தயாராகியுள்ளது. கங்கனா ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும் இதில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. தலைவி படப்பிடிப்பு சென்ற வருட இறுதியில் முடிவடைந்தது.

ஏப்ரல் 23ஆம் தேதி ‘தலைவி’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. தலைவி பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இது போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த காலத்தில் வெளியிட்டால், போட்ட பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்படும். அதனால், தயாரிப்பாளர்கள் தேதி குறிப்பிடாமல் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

கொரோனா பரவல் வேகம் எடுத்திருக்கும் நிலையில், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்களாகும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால், தலைவியை ஓடிடியில் வெளியிட இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பியது. அதற்கு தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தலைவி முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும். அதன் பிறகே ஓடிடி-யில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். தலைவியின் தமிழ்ப் பதிப்பு அமேசானிலும், இந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸிலும் வெளியாகும் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கணா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course