பிரதமர் மோடி 15 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு பயணம்..

கொரோனா ஊரடங்கிற்கு  பின்  15 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். 2020 ம்  ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளுக்குமான விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

 

 

அதன் பிறகு முதன் முறையாக சுதந்திர தின விழாவில் பங்கேற்க ,வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றார். 

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில், வங்கதேசத்தில் நடக்கும் தேசிய தின விழா மற்றும் வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க உள்ளேன்.துங்கிபாராவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளேன். என்று அவர் கூறியுள்ளார்.

 

scroll to top