கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த நோய் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலியாகி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, இதுவரை ஹரியானாவில் 27 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (பிஜிஐஎம்எஸ்) மற்றும் குருகிராமில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளன.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






