அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்குமாம்.
பெரும்பாலானோர் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை செய்து வருகிறார்கள். ஐ.டி.துறையில் ஷிப்டு முறையில் வேலைபார்ப்பவர்கள் மடிக்கணினி முன்பு மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உடல் பருமன், கழுத்து மற்றும் முதுகு வலி பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் பிரச்சனைக்கும் ஆளாக நேரிடும் என்பது சமீபத்திய ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜமா ஆன்காலஜி என்ற மருத்துவ இதழ் சமீபத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்வதற்கும் , புற்றுநோய்க்கும் இடையே உள்ள தொடர்பை மையப்படுத்தி ஆய்வு முடிவை வெளியிட்டது. இடைவெளி எடுத்துக்கொள்ளாமல் போதுமான நேரம் உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இருப்பதை ஆய்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
வாழ்க்கை பழக்கவழக்கங்களிள் இந்த அபாயத்தை தவிர்த்து ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக சுமார் 8 ஆயிரம் பேரின் வாழ்க்கை முறையை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இதனால் உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாத நபர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு 82 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அதிலும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது , சைக்கிள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஓட்டுவது போன்ற உடல் இயக்க செயல்பாடுகளை கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 31 சதவீதம் குறைவாக இருப்பதும் தெரிந்திருக்கிறது
30 நிமிடங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருவது, ஓட்டப்பயிற்சி போன்ற மிதமான பயிற்சிகளுக்கு ஒரு மணிநேரம் செலவிடுவதன் மூலம் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

அலுவலக வேலைக்கு ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்பு சென்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பயணம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்கள் என குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டு இருந்தார்கள். வீட்டில் இருந்தே வேலை செய்வதால் இத்தகைய சந்தர்ப்பங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. உட்கார்ந்தே வீட்டில் அதிக நேரம் பணியில் ஈடுபடுவதால் வழக்கமாக பின்பற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் கவனம் செலுத்தாததும் இந்த ஆய்வின்போது கவனத்தில் தெரியவந்துள்ளது .
கால அட்டவணையை தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்கு நிர்வகித்து அதன்படி செயல்படுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். தொலைபேசியில் பேசும்போது அங்கும் இங்கும் நடமாடுவது, ஒருமுறையாவது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து அறையை சுற்றி சிறிது நேரம் நடப்பது போன்ற சிறிய நடவடிக்கைகள் உடல் நலனிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆய்வுக்குழுவினரின் கருத்தாக இருக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






