ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம் – என்று ஔவையார் தனது பாடலில் பெருமையாக கூறிய உமிழ்நீரை பற்றி பார்ப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
- பரோடிட் சுரப்பி – காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.
- சப்மாண்டிபுலர் சுரப்பி – இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது.
- சப்லிங்குவல் சுரப்பி – கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
உமிழ் நீரின் பண்புகள்:

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இதில் என்சைம்கள் மற்றும் நோய் எதிர்ப்புக் கொல்லி உள்ளது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் அளவு:
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவு மற்றும் மனதின் எண்ணவோட்டத்திற்க்கு ஏற்ப மாறுபடும்.
- உணவில் இனிப்பு , புளிப்பு சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
- உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அளவுக்கதிகமாக சுரக்கும்.
உமிழ்நீரின் பயன்கள்:

- உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.
- உமிழ்நீரில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் செரிக்க உதவுகிறது.
- வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.
- அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.
நல்ல தூய நீர் போல சுவைக்கும் உமிழ் நீர் இருந்தால் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உமிழ்நீர் சுரத்தல் சுகக்கேடு.உமிழ்நீர் கசப்பு , புளிப்பு சுவையுடனோ மேலும் உமிழ்நீர் அடர்த்தியுடன் இருந்தாலோ உடலில் ஏதோ குறை என்று அர்த்தம்.
உமிழ்நீர் நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும். எனவே உமிழ்நீரைக் குடியுங்கள். நீரைச் சாப்பிடுங்கள். உமிழ்நீரை பாதிக்கும் போதைப் பொருட்களான மது, பான்பராக், புகையிலைப் பொருள்களை தவிர்ப்போம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






