உடற்பயிற்சி செய்து அழகான உடலமைப்பை பெற வேண்டும் என்று எடை அதிகம் உள்ள சாதனங்களை “சிறுவயதிலேயே” பயன்படுத்தி கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பல வகைகளில் உடலுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும்.
உடற்பயிற்சியை எந்த வயதில் ஆரம்பிக்கலாம்:
மனித உடல் என்னும் இயந்திரம் சீராக வருவதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதனால் பலரும் உடற்பயிற்சி நிலையங்களான “ஜிம்களை” நாடுகிறார்கள். ஜிம்முக்கு எந்த வயதில் இருந்து போகலாம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட வயது எதுவும் உறுதிப்படுத்தவில்லை.
உடல்வாகு, உடல் தசைகளின் பலத்தைப் பொறுத்து விருப்பமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பளு தூக்குதல், எடை அதிகமான உபகரணங்களை கையாளுதல் போன்ற பயிற்சிகளை 17-18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்வது நல்லது. ஆனால் 14-15 வயதிலேயே பலரும் “ஜிம்முக்கு” சென்று உடற்பயிற்சி செய்வதற்கு ஆசைப்படுகிறார்கள்.
எடை அதிகம் உள்ள சாதனங்களை சிறுபிள்ளை வயதிலேயே பயன்படுத்தி கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பல வகைகளில் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் ஆரம்பகட்டத்தில் இலகுவான உடற்பயிற்சிகளை செய்து பழகுவதே நல்லது,சரியான வழிகாட்டுதலின் கீழ்தான் அந்த உடற்பயிற்சிகளையும் தொடங்க வேண்டும்.
பளு தூக்கும் பயிற்சிகளை 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் செய்யக்கூடாது என்பது உடற்பயிற்சி ஆராய்ச்சியாளரின் கருத்தாக சொல்லப்படுகிறது. அந்த பயிற்சிகள் செய்யும் போது உடலில் காயங்களை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் பயிற்சிகளை மட்டும் சிறுவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இளம் வயதிலேயே எடை தூக்கும் பயிற்சிகள் செய்தால் தசைகள் சோர்வடைந்து அதிக பிரச்சனையை ஏற்படுத்தும். எனென்றால் 14-16 வயதில் தசைகள் பலமாக இருக்காது. இதனால்தான் தசைகள் எளிதாக சோர்ந்து பலவீனமாகிவிடும். கடினமான உடற்பயிற்சிகளை செய்பவர்கள் அதற்கு ஏற்றபடி போதுமான ஊட்டச்சத்து உள்ள உணவினை உட்கொள்ளவேண்டும். ஆனால் பெரும்பாலும் சிறுவர்கள் சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆரோக்கியமற்ற நொறுக்குத் தின்பண்டங்களை சாப்பிடுவதற்கே ஆசைப்படுகிறார்கள். அதாவது நம் உடலுக்கேற்ற ஊட்டச்சத்துக்களை சாப்பிடாமல் பயிற்சி மேற்கொண்டால் பின்னாளில் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக இடுப்பு, முழங்கால் வலி, திசுக்கள் சேதமடைதல் போன்ற பிரச்சனைகள் வரும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






