இன்றைய கொரோனா காலகட்டத்தில் அடிக்கடி கை கழுவ வேண்டிய நிலை உள்ளது. இதனால் கைகளில் நிறைய பேருக்கு சருமம் வறண்டு போய் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இயற்கையாக சருமத்தை ஈரப்பதமூட்டுவது அவசியம். அதற்கு இயற்கையான சில பொருட்கள் உதவி செய்கின்றன. இது உங்க சருமத்திற்கு ஈரப்பதமூட்ட உதவுகிறது.
இந்த கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் நாம் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அடிக்கடி கை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்ற விஷயங்களை நாம் அனைவரும் பின்பற்றி வருகிறோம். வெளியே சென்று வந்தாலே கை கழுவிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்படி கை கழுவுவது போன்ற விஷயங்களுக்கு அடிக்கடி சானிடைசர் அப்ளை செய்வது, நம் கைகளை வறண்டு போக வைத்து விடும். கைகளில் உள்ள ஈரப்பதங்கள் குறைய ஆரம்பித்து விடுவதால் நிறைய பேர் கைகளில் தோல் உரிதல், சொரசொரப்பு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே கைகளில் ஏற்படும் இந்த சரும பிரச்சனையை சில வீட்டு வைத்திய முறைகள் மூலம் நாம் சரி செய்யலாம்.
கற்றாழை ஜெல்

நம் சருமத்தை கற்றாழை ஜெல் ஈரப்பதமூட்ட உதவுகிறது. கற்றாழை ஜெல் கைகளை மென்மையாக வைக்கவும் அழகுபடுத்தவும் உதவுகிறது. கற்றாழை ஜெல்லை எடுத்து நம் கைகளில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இது உங்க சருமத்தில் இருக்கும் வறட்சியை போக்க உதவும்.
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல் (தேவைக்கேற்ப)
பயன்படுத்தும் முறை
கற்றாழை ஜெல்லை எடுத்து உங்க கைகளில் அப்ளை செய்து கொள்ளுங்கள். கைகளில் நன்றாக தேய்த்து கை முழுவதும் அப்ளை செய்யுங்கள். சில நிமிடங்கள் கைகள் அதை உறிஞ்சட்டும். இதை பல தடவை செய்யும் போது நன்மை கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்

ஈரப்பத மூட்டுவதில் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. எனவே உங்க வறண்ட கைக்கு இது சிறந்த ஒன்று.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் (தேவைக்கேற்ப)
பயன்படுத்தும் முறை
கைகளில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்து அதை மாய்ஸ்சரைசர் மாதிரி அப்ளை செய்து கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் நன்றாக தேய்த்து கை முழுவதும் தேங்காய் எண்ணெய்யை பரப்பி விடுங்கள். கைகள் உறிஞ்ச அதை அப்படியே விட்டு விடுங்கள். தேங்காய் எண்ணெய்யை உங்க சரும வறட்சி போகும் வரை அப்ளை செய்யுங்கள்
சூரியகாந்தி விதை எண்ணெய்

சருமத்திற்கு சூரியகாந்தி விதை எண்ணெய் ஊட்டச் சத்துக்களை அளிக்கிறது. இது சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்தை அளிக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
சில சொட்டுகள் சூரிய காந்தி எண்ணெய்
பயன்படுத்தும் முறை
கைகளில் சில துளிகள் சூரியகாந்தி எண்ணெய்யை அப்ளை செய்து கொள்ளுங்கள். கைகளில் தேய்த்து மசாஜ் செய்து சில நிமிடங்கள் உறிஞ்சும் வரை அப்படியே விட்டு விடுங்கள். சூரியகாந்தி எண்ணெய்யை உங்க வறண்ட சருமம் சரியாகும் வரை அப்ளை செய்யுங்கள்.
தேன்

சருமத்திற்கு தேன் ஈரப்பதமூட்டவும், சரும பிரச்சனைகளை ஆற்றவும் உதவுகிறது. இது சரும ஈரப்பதத்தை தக்க வைக்கவும் சருமத்தை புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
தேவைக்கேற்ப தேன்
பயன்படுத்தும் முறை
கைகளில் தேனை அப்ளை செய்து தடவிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் அதை மசாஜ் செய்யுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் உங்கள் சருமம் மென்மைத் தன்மையை அடையும்.
பெட்ரோலியம் ஜெல்லி
உங்க சருமத்திற்கு பெட்ரோலியம் ஜெல்லி ஒரு பாதுகாப்பு அரண் மாதிரி செயல்படுகிறது. உங்க சருமத்தில் இருக்கும் காயங்கள் பிரச்சினைகளை ஆற்ற உதவுகிறது.
தேவையான பொருட்கள்
பெட்ரோலியம் ஜெல்லி
பயன்படுத்தும் முறை
கைகளில் பெட்ரோலியம் ஜெல்லியை அப்ளை செய்து கொள்ளுங்கள். பெட்ரோலியம் ஜெல்லியை கைகள் நன்றாக உறிஞ்சும் வரை காத்திருங்கள். இதை ஒரு நாளைக்கு பல முறை என உங்க கை வறட்சி போகும் வரை அப்ளை செய்யுங்கள்.
கைகளை பராமரிப்பது எப்படி

ஈரப்பதத்தை கைகளில் தக்க வைக்க மாய்ஸ்சரைசரை அப்ளை செய்து வாருங்கள்.உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைசர் மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது. எனவே மாய்ஸ்சரைசர் லோஷனை குளித்து முடித்து வெளியே வந்த உடன் அப்ளை செய்யுங்கள்.
சூடான நீரை சருமத்திற்கு பயன்படுத்தாதீர்கள்.உங்க சருமத்தில் சூடான நீர் எண்ணெய் பசையை நீக்கி வறண்டு போக வைத்து விடும். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதும், ஆல்கஹால் சார்ந்த சானிடைசரைப் பயன்படுத்துவதும் இன்னும் பல விளைவுகளை உண்டாக்குகிறது.
எனவே குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் மட்டுமே கைகளை கழுவ பயன்படுத்துங்கள்.வறண்ட சருமம் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால் வீட்டு வேலைகளைச் செய்யும் போது கையுறைகளை அணிவது மிகவும் அவசியம்
ஏனெனில் கடுமையான இரசாயனங்கள் பாத்திரம் கழுவும் சோப்புகளில் இருக்கின்றன. அவை உங்க சருமத்தை உலர்ந்து போக வைத்து விடும். எனவே வீட்டு வேலைகளைச் செய்யும் போது நீங்கள் ரப்பர் கையுறைகளை அணிந்து கொண்டு வேலையில் ஈடுபடுங்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







