பணத்திற்காக தங்கையையே கழுத்தை அறுத்து கொலை செய்த அண்ணன்…

பணத்திற்காக தங்கையை கழுத்தை அறுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது. கடன் தொல்லை தாங்க முடியாமல், அதை சமாளிப்பதற்காக தங்கையின் கழுத்தை அறுத்து விட்டார் அண்ணன். புதுக்கோட்டையில் உள்ள பொன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன், இவர் மின்சார துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த வருடம் உடம்பு சரியில்லாமல் பழனியப்பன் இறந்துவிட்டார். அவரது மனைவி சிவகாமி, தன்னுடைய 20 வயது மகள் லோக பிரியாவுடன் தனியே வசித்து வந்தார். சிவகாமி வேலை பார்த்து மகளை படிக்க வைத்துள்ளார்.


புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம்.காம் படித்து வந்துள்ளார் லோகப்பிரியா. வீட்டில் ஆண் துணை இல்லாததால், லோகப்பிரியாவின் பெரியப்பா மகன், சுரேஷ் என்பவர் இவர்களின் வீட்டில் தங்கி உதவி வந்துள்ளார். எப்படியும் லோகப்பிரியாவின் திருமணத்திற்கு நிறைய பணமும், நகைகளும் சேர்த்து வைத்திருப்பார்கள் என்று திட்டம் போட்டு சுரேஷ் அதே வீட்டில் இருந்து வந்துள்ளார். தகுந்த நேரத்தில் அவற்றை கொள்ளையடிக்கவும் திட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று வழக்கம் போல் சிவகாமி வேலைக்கு போய்விட்டார். லோகப்பிரியா மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென ஒரு கத்தியை எடுத்து வந்து லோக பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சுரேஷ். பிறகு வீடு முழுக்க பணம், நகைகளை தேடியுள்ளார். கடைசியில் பீரோவில் 2 ஆயிரம் ரூபாய் தான் இருந்திருக்கிறது. பிறகு லோக பிரியாவின் கழுத்தில் இருந்த 9 கிராம் நகையை அறுத்துக் கொண்டு, பிரியாவின் ஸ்கூட்டியையும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளான் சுரேஷ். வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சிவகாமி, மகளின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அலறி துடித்தார். அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

பிறகு போலீசுக்கு விஷயம் தெரிந்து அவர்களும் விரைந்து வந்தனர். இறுதியில் சுரேஷ் குறித்த தகவல்கள் கிடைத்தன. சுரேஷிற்கு எந்த வேலையும் கிடையாது. ஊதாரியாக ஊர் சுற்றி வந்துள்ளார். ஏதாவது சொல்லி கோபித்து கொண்டு போய்விட்டால், வீட்டில் ஆண் துணை இல்லாமல் போய்விடும் என்று நினைத்து சிவகாமி எதுவும் கண்டிக்காமல் இருந்துள்ளார். ஆனால் நாளடைவில் சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அது மட்டும் இல்லாமல் ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் கடன் வாங்கியவர்கள் கழுத்தை நெறிக்கவும்தான், தங்கை என்றும் நினைக்காமல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பணத்துக்காக தங்கையை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top