மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள வளாகத்தில் ரெம்டெசிவியர் மருந்தை குப்பையில் போட்டுவிட்டு பின்னர் அதை வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்கும் அவலம் நிகழ்ந்துள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவியர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரெம்டெசிவியர் மருந்து பெட்டிகளை அங்கிருந்த ஊழியர்கள் மூலம் குப்பை தொட்டியில் போட்டு விட்டு அதனை வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கு எழுந்துள்ளது.

இந்த கொடுமையை ரெம்டெசிவியர் மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவர், முறைகேடு நடக்கும் இடத்திற்கு சென்று அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வெளிச்சந்தையில் ஆறு வயல்கள் கொண்ட ஒரு பெட்டி ரெம்டெசிவியர் மருந்து சுமார் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மதுரை விற்பனையகத்தில் ரெம்டெசிவியர் டோக்கன் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், தற்போது முறைகேடு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெம்டெசிவியர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்த மருந்து விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






